• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கியது ஏன்? புதிய தகவல்கள்

Byadmin

Aug 16, 2026


ஏர் இந்தியா, விமானி, ஏர்பஸ் ஏ320 விமானம், டெல்லி

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் டெல்லியில் தரையிறங்கும் புகைப்படம்.

ஒரு விமான பயணத்திற்குப் பிறகு ஏர் இந்தியா விமானி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள், விமானப் போக்குவரத்து விசாரணை அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது.

ஆனால் இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அப்படியே உறுதிப்படுத்தப்பட்டாலும், அது நாம் நினைப்பது போல உடனடியாக குற்றத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய ஆதாரமாக மாறிவிடாது.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தாய்லாந்தின் ஃபுகெட்டில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் திடீரென வானில் சுமார் 91 மீட்டர் (300 அடி) கீழே இறங்கியதால், 13 பயணிகள் மற்றும் நான்கு விமானக் குழுவினர் காயமடைந்தனர். 137 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் பயணித்த அந்த விமானம், பின்னர் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளுக்கும் பயணத்திற்குப் பின்னரான வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை செய்யப்பட்டது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், கேப்டனின் ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிவுகளில் ‘கூடுதல் உறுதிப்படுத்தல்’ தேவைப்பட்டதாகவும், விசாரணை முடியும் வரை இரண்டு விமானிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில், ஆய்வகத்தில் நடத்தப்பட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையில் கேப்டன் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியது உறுதியானதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஏர் இந்தியா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த செய்திகள், இந்தியாவில் விமானிகளுக்கான போதைப்பொருள் சோதனை மற்றும் விமானப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

By admin