• Fri. Nov 27th, 2026

24×7 Live News

Apdin News

இரானில் போராட்டங்களுக்குப் பிறகு மரண தண்டனையை எதிர்கொள்ளும் பெண்களின் உருக்கமான கோரிக்கைகள்

Byadmin

Nov 27, 2026


ஜனவரி மாதம் இரான் முழுவதும் பரவிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக தரனேவும் அவரது இரட்டைச் சகோதரி ரொமினாவும் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார்.

படக்குறிப்பு, ரொமினா (இடது) மற்றும் தரனே ரஹிமி ஆகிய இரட்டைச் சகோதரிகள் ஜனவரி மாத இறுதியில் கைது செய்யப்பட்டதாக அவர்களின் உறவினர் ஒருவர் கூறுகிறார்.

    • எழுதியவர், சோரூஷ் பக்ஸாத்
    • பதவி, பிபிசி பாரசீக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இரானில் தரனே ரஹிமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 வயதான தரனேவின் கால்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை. மேலும், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், காதில் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர் கூறுகிறார்.

அவர் “மன உறுதியுடன் இருக்க முயற்சி செய்கிறார். ஆனால், சில நாட்களில் மனமுடைந்து அழுதுவிடுகிறார்” என்று தரனேவின் உறவினரான மசூத் நூர்மொஹம்மதி பிபிசி பாரசீக சேவையிடம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் இரான் முழுவதும் பரவிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக தரனேவும் அவரது இரட்டைச் சகோதரி ரொமினாவும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

“இரட்டைச் சகோதரிகளை அவர்களது தாய் முதன்முதலில் சிறையில் சந்தித்தபோது, இருவரின் முகங்களும் வீங்கி, காயங்களுடன் காணப்பட்டன. அவர்களது தலைமுடியும் பிடுங்கப்பட்டிருந்தது. இதனால், அவர்களின் குரல்களைக் கேட்டுத்தான் இருவரையும் அடையாளம் காண முடிந்தது” என்று அமெரிக்காவில் இருந்து பேசிய நூர்மொஹம்மதி கூறினார்.

தன் கண் முன்னாலேயே தனது சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார் என்று விசாரணை அதிகாரிகள் மிரட்டியதைத் தொடர்ந்து, தரனே ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறுகிறார்.

By admin