35
உலக சினிமா ரசிகர்களும், ‘அவதார்’ (Avatar) பிரியர்களும் ஆவலுடன் காத்திருந்த அந்த மெகா அறிவிப்பு வெளியாகிவிட்டது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட அறிவியல் புனைவுப் பயணமான ‘அவதார்’ வரிசையின் அடுத்த இரண்டு பாகங்களான ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ திட்டமிட்டபடி திரையரங்குகளுக்கு வருவதை டிஸ்னி நிறுவனம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்துள்ளது.
டிஸ்னியின் வரவிருக்கும் திரைப்படப் பட்டியலில் ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ இடம்பெற்றுள்ளன. அதன்படி, ‘அவதார் 4’ டிசம்பர் 21, 2029 அன்றும், ‘அவதார் 5′ டிசம்பர் 19, 2031 அன்றும் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash) திரைப்படம் உலகளவில் சுமார் 1.49 பில்லியன் டொலர் வசூலைக் குவித்த போதிலும், முந்தைய பாகங்களுடன் ஒப்பிடும்போது வசூலில் சற்றுக் குறைவு காணப்பட்டது. அதீத தயாரிப்புச் செலவு மற்றும் ஜேம்ஸ் கேமரூனின் பிற திட்டங்களால் அடுத்த பாகங்கள் வருமா இல்லையா என்ற சந்தேகம் சினிமா வட்டாரத்தில் நிலவி வந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
கதையில் ஏற்படும் கால ஓட்ட மாற்றத்தைச் சமாளிக்க, சல்லி குடும்பத்தின் இளைய கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் முந்தைய பாகங்களின் படப்பிடிப்பின்போதே படமாக்கப்பட்டுவிட்டன.
அடுத்த பாகங்களை உருவாக்குவதில் தயாரிப்புச் செலவையும் நேரத்தையும் குறைப்பதுடன், அதிநவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.