• Fri. Nov 27th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: பட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா? 2 கடிதங்களால் எழுந்த சர்ச்சையின் பின்னணி

Byadmin

Nov 27, 2026


'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் கூறவில்லை. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்டது மனவேதனையைத் தருகிறது' - இந்து சமய அறநிலையத் துறைக்கு நவம்பர் 25 ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலின் பட்டர்கள் எழுதிய கடிதம் இது.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் கூறவில்லை. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்டது மனவேதனையைத் தருகிறது’ – இந்து சமய அறநிலையத் துறைக்கு நவம்பர் 25-ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோவிலின் பட்டர்கள் எழுதிய கடிதம் இது.

மறுநாளே, பட்டர்கள் தரப்பில் வெளியான மற்றொரு கடிதத்தில் ‘சைவ சமய நெறிமுறைகளின்படி உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றியது சரியானது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவில் பட்டர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து மறுப்பு கடிதம் பெறப்பட்டதாக, இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன. ஆனால், “எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை” என பிபிசி தமிழிடம் பேசிய கோவிலின் தலைமைப் பட்டர் ராஜா தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்துள்ள மலையின் மேலே இடதுபுறம் காசி விஸ்வநாதர் கோவிலும் வலதுபுறத்தில் உள்ள மலையில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளன.

‘மலையின் உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபநாளான நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை தீபம் ஏற்றலாம்’ என, உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியை வழங்கியது.

By admin