• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

‘5 லட்சம் பேர், 151 கார்கள், 6 ஹெலிபேட்கள், கூட்டத்தால் ஒத்திவைக்கப்பட்ட குதிரை பந்தயம்’ – பேசுபொருளான பிகார் எம்எல்ஏ மகள் திருமணம்

Byadmin

Nov 26, 2026


ஷிவாங்கி சிங் – ரிஷிகேஷ் குமார் திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.

படக்குறிப்பு, ஷிவாங்கி சிங் – ரிஷிகேஷ் குமார் திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவின் ஏழ்மையான மாநிலமான பிகாரில், அரசியல்வாதி ஒருவரின் மகளுக்காக நடத்தப்பட்ட ஆடம்பரத் திருமணக் கொண்டாட்டங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.

பிகார் சட்டப்பேரவை உறுப்பினரான அனந்த் சிங்கின் மகள் ஷிவாங்கி சிங்கின் திருமணம், பல நாட்களாக நடைபெற்ற பிரமாண்டக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் குதிரைப் பந்தயம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

பாட்னா நகரில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள நாடவா கிராமத்தில், அனந்த் சிங்கின் பூர்வீக வீட்டில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மோகாமா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்த் சிங், இந்த மாதத் தொடக்கத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிகாரில் இருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருந்து, பாகிஸ்தானில் இருந்தும்கூட அழைத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

நேற்று அங்கிருந்து வெளியான செய்திகளின்படி, அவர் கூறியதைப் போலவே உண்மையிலேயே அனைவரும் வந்துவிட்டதாகத் தோன்றியது.

By admin