• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் பாகிஸ்தான் தொலைக்காட்சி தொடருக்கு எதிர்ப்பு: ரத்தான 2 திரையிடல் நிகழ்ச்சிகள்

Byadmin

Nov 26, 2026


பாகிஸ்தானின் 'தர்-இ-நிஜாத்' தொலைக்காட்சித் தொடர் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படக்குறிப்பு, பாகிஸ்தானின் ‘தர்-இ-நிஜாத்’ தொலைக்காட்சித் தொடர் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    • எழுதியவர், ஸோயா மதீன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புதன்கிழமை வரை, இந்தியாவின் பெங்களூரு நகரைச் சேர்ந்த சில தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களின் வார இறுதித் திட்டம் சற்று வித்தியாசமாக இருந்தது. சிறப்பான இரவு விருந்தில் பங்கேற்று, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகிஸ்தானியக் கற்பனைக் காதல் ஜோடியின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கண்டறிவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால், அரசியல் சூழல் குறுக்கிட்டது.

இந்திய சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ள பாகிஸ்தானியத் தொலைக்காட்சித் தொடரான ‘தர்-ஏ-நிஜாத்’ (விடுதலைக்கான கதவு) தொடரின் இரண்டு தனிப்பட்ட திரையிடல்கள் ரத்து செய்யப்பட்டன. இணையத்தில் எழுந்த எதிர்ப்பும் காவல்துறையின் விசாரணையும் இதற்குக் காரணமாக அமைந்தன.

பாகிஸ்தானின் ஏஆர்ஒய் டிஜிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடரை, சில யூடியூப் சேனல்கள் மூலம் இந்தியப் பார்வையாளர்கள் பார்க்க முடிகிறது. எனினும், அந்தத் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில், அணு ஆயுதங்கள் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே குறுகிய காலம் நீடித்தாலும் தீவிரமான ராணுவ மோதல் நடந்தது. இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார தொடர்புகள் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகவே உள்ளன. இருந்தாலும், தற்போது இந்தியாவில் பாகிஸ்தான் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களுக்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது.

By admin