• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க குழந்தைகளுக்கு ஜாக்பாட்: ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கு!

Byadmin

Nov 26, 2026


எதிர்காலக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், மனித வாழ்வை பல கோள்களுக்கும் விரிவுபடுத்தும் இலக்கிலும் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் உரிமை அடுத்த தலைமுறை அமெரிக்கர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

தற்போது செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு டிரம்ப் கணக்கிற்கும் புதிதாக வெளியிடப்படும் ஒரு கிளாஸ் ஏ சாதாரணப் பங்கை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க குழந்தைகளுக்கு நிறுவனத்தில் பங்கு உரிமை பெற்று நீண்டகால சேமிப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கை வழங்குவதாகக் கடந்த அக்டோபரில் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் உறுதியளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, நிறுவனம் வழங்கும் பங்கு எண்ணிக்கைக்கு இணையாகத் தனது சொந்தப் பங்குகளையும் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வர்த்தக முடிவில் நாஸ்டாக் சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு ஒன்று 127 அமெரிக்க டாலர் என்ற அளவில் நிறைவடைந்தது.

குவின் ஷாட்வெல்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான குவின் ஷாட்வெல், அடுத்த தலைமுறையினருக்கான தமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகச் சொந்தமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வழங்குவதாகத் தனியாக அறிவித்துள்ளார்.

எதிர்கால கட்டமைப்பு

எதிர்காலக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், மனித வாழ்வை பல கோள்களுக்கும் விரிவுபடுத்தும் இலக்கிலும் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் உரிமை அடுத்த தலைமுறை அமெரிக்கர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். வரிச் சலுகைகள் கொண்ட முதலீட்டுக் கணக்குகளான ட்ரம்ப் கணக்குகள் மூலம் அமெரிக்கக் குழந்தைகள் நீண்டகாலச் சேமிப்பை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில், ஸ்பேஸ்எக்ஸ், எலான் மஸ்க் மற்றும் ஷாட்வெல் ஆகியோரின் பங்களிப்புகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

By admin