• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை? – ஹோர்மூஸ் பதற்றத்துக்கிடையே டிரம்ப் வெளியிட்ட பதிவு

Byadmin

Apr 20, 2026


டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது பிரதிநிதிகள் நாளை மாலைக்குள் பாகிஸ்தான் சென்றடையலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் செல்கின்றனர். பேச்சுவார்த்தைக்காக அவர்கள் நாளை மாலை அங்கு சென்றடைவார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மேலும் கூறுகையில், “நாங்கள் மிகவும் நியாயமான ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிகிறோம். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், அமெரிக்கா இரானின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் மற்றும் ஒவ்வொரு பாலத்தையும் தரைமட்டமாக்கும்,” என்றார்.

பிபிசி பெர்சிய சேவையின்படி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகத் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனது பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை பாகிஸ்தான் செல்கிறார்களா இல்லையா என்பது குறித்து இரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

By admin