• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | அதிரடி அரைசதத்தால் கே.எல். ராகுலை பின்னுக்குத் தள்ளிய ப்ரியன்ஷ் ஆர்யா

Byadmin

Apr 20, 2026


ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் பந்தில் இருந்தே சிறப்பாக ஆடிய ப்ரியன்ஷ் 37 பந்துகளில் 93 ரன்களை விளாசி அசத்தினார். நேற்றைய (ஏப்ரல் 19) போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், ப்ரியன்ஷ் ஆர்யா ஐ.பி.எல். தொடரில் புது சாதனை படைத்துள்ளார்.

அதிக முறை 20 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ப்ரியன்ஷ் ஆர்யா கே.எல். ராகுலை முந்தியுள்ளார். தற்போது ப்ரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு மூன்று முறை அரைசதம் விளாசியுள்ளார்.

நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டி (19 பந்துகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி (16 பந்துகள்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி (19) என இதுவரை மூன்றுமுறை ப்ரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார்.

மாறாக கே.எல். ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டி (2018-இல் 14 பந்துகளில்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி (2019-இல் 19 பந்துகளில்) என இருமுறை 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளில் ப்ரியன்ஷ் ஆர்யா இதுவரை 211 ரன்கை குவித்துள்ளார். இவரது சராசரி 42.20 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 248.23 ஆகவும் உள்ளது. இந்த சீசனில் மட்டும் இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 14 பவுண்டரிகளும், 20 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி இருக்கும் ப்ரியன்ஷ் இதுவரை 686 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 31.18 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 196 ஆகவும் உள்ளது. இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும்.

நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 254 ரன்களை குவித்தது. கடின இலக்கை துரத்திய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாகவும் விளங்குகிறது.

By admin