7
பொலிவுட் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் ரன்பீர் கபூர் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘லவ் & வார்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி படைப்பாளுமை முகமாக திகழும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார் ‘ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் , அலியா பட் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஹியூன்ட்சாங் மொஹபத்ரா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இசையமைக்கிறார். காதல் காவியமாக தயாராகும் இந்த திரைப்படத்தை பன்சாலி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் , படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில் இந்த திரைப்படம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே ரன்பீர் கபூர்- அலியா பட்- சஞ்சய் லீலா பன்சாலி – ஆகிய மூவரணி கூட்டணி தொடர் வெற்றிகளை அளித்து வருவதால்… அவர்களுடைய கூட்டணியில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்திற்கும் திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.