• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

‘தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள்’ என்ற அமித் ஷா வாக்குறுதியை ஏற்பதில் என்ன சிக்கல்? நீலகண்டன் பதில்

Byadmin

Apr 19, 2026


தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு

பட மூலாதாரம், ANI

இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை திருத்தியமைக்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியை தழுவியது.

இந்த மசோதாவின் ஆரம்ப நிலையிலிருந்தே எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகையின் அடிப்படையில் திருத்தியமைத்தால், அது தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமாக அமையுமென கூறப்பட்டது.

ஆனால், எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகக் கூறியது மத்திய அரசு. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதா தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இந்தியாவி்ல தொகுதி மறுவரையறை செய்யும் விவகாரம் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து எழும் கேள்விகள், தீர்வுகள் குறித்து ‘தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு’ (South Vs North : India’s Great Divide) நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கலந்துரையாடினார். அதன் விவரம் கேள்வி – பதில் வடிவில்..

கேள்வி: தொகுதி மறுவரையறை என்பது என்ன?

By admin