• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

இரான் துறைமுகங்கள் முற்றுகை: அமெரிக்கா தப்புக்கணக்கு போடுகிறதா?

Byadmin

Apr 14, 2026


இரான் - அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணை, இரான் துறைமுகங்கள் முற்றுகை, அமெரிக்க கடற்படை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமையன்று, ஓமனுக்கு அருகே உள்ள ஹோர்மூஸ் நீரிணையில் ஒரு கப்பல்.

வளைகுடாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் கப்பல்களை முற்றுகையிடும் திறன் அமெரிக்க ராணுவத்திடம் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அதற்கான நோக்கம் என்ன என்பதே இங்கு எழும் கேள்வியாகும்.

“இதை செய்ய முடியும் என்றே நான் நினைக்கிறேன்,” என ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை உயரதிகாரி மார்க் மாண்ட்கோமெரி பிபிசியிடம் தெரிவித்தார். “மற்ற மாற்றுவழிகளை விட இது நிச்சயமாகக் குறைவான ஆபத்து கொண்டதாகும்.”

சமீப வாரங்களில் அதிபர் டிரம்ப் முன்மொழிந்த சில வாய்ப்புகள், அதாவது கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் சரக்கு கப்பல் தொகுதிகளுக்கு ராணுவப் பாதுகாப்பு அளிப்பது ஆபத்தானவையாகவும், பெரும் விலையைக் கோரும் சாத்தியம் கொண்டவையாகவும் அமைந்திருக்கும்.

இந்த முயற்சியில் அமெரிக்கப் படைகள், இரானிய ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் அதிவேகப் படகுகளின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும். நீரில் கண்ணிவெடிகள் இருப்பதற்கான சாத்தியமும் ஆபத்தை அதிகரிக்கும்.

மாறாக, ஒரு முற்றுகையானது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவில், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் பாதுகாப்பாக நிலைத்திருக்கவும், இரானியத் துறைமுகங்களிலிருந்து வெளியேறும் கப்பல்களைக் கண்காணிக்கவும், அவற்றைத் தங்கள் விருப்பப்படி இடைமறிக்கவும் வழிவகுக்கிறது.

By admin