• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போரின் தாக்கத்தால் வளைகுடா நாடுகளில் அரங்கேறும் கைது நடவடிக்கைகள்

Byadmin

Apr 30, 2026


இரான் போர் தாக்கம்: வளைகுடா நாடுகளில் கைது அலை, குடியுரிமை ரத்து நடவடிக்கைகள் தீவிரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவைத்-அமெரிக்க பத்திரிகையாளர் அகமது ஷிஹாப்-எல்டின், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய போர் வெடித்ததில் இருந்து, தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதப்படும் உள்ளடக்கங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வளைகுடா நாடுகள் கைது செய்துள்ளன, வழக்கு தொடர்ந்துள்ளன மற்றும் நாடு கடத்தியுள்ளன.

அதிகாரிகள் புதிய அரசாணைகளை வெளியிட்டுள்ளனர், நீதித்துறை மேல்முறையீட்டுக்கான வழிகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர், மேலும் தனிநபர்களின் குடியுரிமையைப் பறிப்பது உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர்.

பஹ்ரைன் 69 பேரின் குடியுரிமையை ரத்து செய்த பிறகு, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் “பகைமை கொண்ட இரானிய செயல்களைப் புகழ்ந்ததற்காக அல்லது அதற்கு அனுதாபம் காட்டியதற்காக, அல்லது வெளித் தரப்பினருடன் தொடர்புகொண்டதற்காக இந்த நபர்களிடம் இருந்து பஹ்ரைன் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது,” என அறிவித்தது.

சமூக ஊடகங்களில் பயனர்கள் மற்றும் ஆர்வலர்களைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்திற்கு ஓர் அடியாக இருப்பதாகக் கூறுகின்றன.

By admin