• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போர் விவகாரத்தில் அல்-கயீதா அமைதி காப்பது ஏன்? பின்னணியில் நடப்பது என்ன?

Byadmin

Apr 25, 2026


பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதலின்போது, ​​மத்திய தெஹ்ரானில் ஏற்பட்ட வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதலின்போது, ​​மத்திய தெஹ்ரானில் ஏற்பட்ட வெடிப்பு

பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் குறித்தும், அதன் பரந்த தாக்கங்கள் குறித்தும் பயங்கரவாத அமைப்பான அல்-கயீதா பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது.

இந்த மௌனம் வழக்கத்திற்கு மாறானது. கடந்த காலங்களில், மத்திய கிழக்கில் நிகழும் முக்கிய நிகழ்வுகளுக்கு அல்-கயீதாவும் அதனுடன் தொடர்புடைய குழுக்களும் வழக்கமாக எதிர்வினையாற்றி வந்துள்ளன. குறிப்பாக, தற்போதைய சூழலில் நிகழ்வது போல, இத்தகைய மோதல் ஜிஹாதி குழுக்களிடையே பரவலாக விவாதிக்கப்படும் நிலையில், அவை அறிக்கைகளை வெளியிடுவதும் வழக்கமாக நடக்கிறது.

இந்த ஆண்டில், அல்-கயீதா வின் மையத் தலைமையிடம் இருந்து ஒரேயொரு அறிக்கை மட்டுமே வெளியானது. அதுவும் பிப்ரவரி 4ஆம் தேதியன்று வெளியானது. இரானுடனான பதற்றங்கள் அதிகரித்து வந்ததன் காரணமாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வந்த காலகட்டத்தில் இந்த அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில், அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துமாறு அந்த அமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. சில ஜிஹாதி போட்டி குழுக்கள் இதை இரானுக்கு அளிக்கப்பட்ட மறைமுக ஆதரவாகவே கருதின.

அல்-கொய்தா தற்போது மௌனம் காப்பதற்குத் தெளிவான காரணங்கள் இருக்கக்கூடும். அந்த அமைப்பு தற்போது ஒரு கடினமான, மிகவும் நுட்பமான சூழலில் சிக்கியுள்ளது.

By admin