• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று விவசாயி தற்கொலை- பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

Byadmin

Apr 25, 2026


தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சித்தாப்பூரை சேர்ந்தவர் ராஜூ (வயது 43). விவசாயி. இவரது மனைவி ராணி (40). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ராஜூக்கு சமீப காலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வந்து மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

இதில் ராணி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்து விட்டதால் ராஜூ தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர்களது குழந்தைகள் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர்.

By admin