• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?

Byadmin

Apr 25, 2026


காணொளிக் குறிப்பு,

உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?

இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாயல், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கப் பதக்கம் வென்றார்.

முறையான வில்வித்தை பயிற்சியைத் தொடங்குவதற்காக பாயல் 2023ஆம் ஆண்டில் கத்ராவுக்கு அழைத்து வரப்பட்டார்.

தேசியளவில் பாயல் ஜெய்ப்பூரில் நடந்த 2025 தேசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமானார்.

பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில், பாயல் தனது பயிற்சி கூட்டாளியும் நடப்பு உலக சாம்பியனுமான ஷீத்தல் தேவியை வீழ்த்தினார்.

பாயலின் மூத்த சகோதரியான வர்ஷா, கத்ராவில் அவருடனேயே வசித்து, அவருக்குப் பராமரிப்பாளராக துணை நிற்கிறார்.

மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் உந்தப்பட்டு, பாயல் இப்போது இந்தியாவுக்காக ஓர் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல விரும்புகிறார்.

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin