கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெறும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 249 ஓட்டங்களை வெற்றி இலக்காக பங்களாதேஷ் நிர்ணயித்துள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 67 ஓட்டங்களையும் தௌஹித் ஹிரிதோய் 51 ஓட்டங்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 33 ஓட்டங்களையும் ஜேக்கர் அலி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அணிக்கு மீளழைக்கக்பட்ட துஷ்மன்த சமீர 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றன.
மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக துனித் வெல்லாலகேவும் ஏஷான் மாலிங்கவுக்கு பதிலாக துஷ்மன்த சமீரவும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
The post இலங்கைக்கு வெற்றி இலக்கு 249 ஓட்டங்கள் appeared first on Vanakkam London.