• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை: அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு – ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களை தேர்வு செய்வது ஏன்?

Byadmin

Sep 21, 2024


இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இலங்கையில் ஜனாதிபதிதேர்தல் இன்று நடைபெறுகிறது. 38 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?

தேர்தலில் நிற்காமல் ரணில் ஜனாதிபதியானது எப்படி?

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்திக்கும் முதல் தேர்தல் இது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 52 சதவீத வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ, சுமார் 42 சதவீத வாக்குகளையே பெற்றார். கோட்டாபய பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தனர்.

ஆனால், 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக 2022-ஆம் ஆண்டில் பெட்ரோல் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். நாடாளுமன்றத்தின் மூலம் ஜூலை 21ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

By admin