• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை அதிபர் தேர்தல்: மும்முனைப் போட்டியில் முந்துவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் – நேரலை

Byadmin

Sep 22, 2024


இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.

தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசா சுமார் 22 சதவீத வாக்குகளும், மூன்றாவது இடத்தில் உள்ள ரணில் விக்ரமசிங்கே 18 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இலங்கையில் 76.93% வாக்குப்பதிவு

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகள் உள்பட இலங்கை முழுவதுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 76.93 சதவீத வாக்குகள் பதிவாயின.

அதாவது, வாக்களிக்கத் தகுதி பெற்ற 2,23,290 வாக்காளர்களில் 1,71,771 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 4,140 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட, சரியாக 1,67,631 வாக்குகள் செல்லத்தக்கவையாக இருந்தன.

By admin