• Wed. Sep 25th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை இளையோர் கால்பந்தாட்டத்திற்கு சர்வதேச அரங்கில் தோல்விமேல் தோல்வி

Byadmin

Sep 25, 2024


ஆசிய தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கையின் சிரேஷ்ட அணி திருப்திகரமான பெறுபேறுகளை ஈட்டிவரும் நிலையில்  இலங்கையின்  இளையோர் அணிகள் தோல்விமேல் தோல்விகளைத் தழுவி வருகிறது.

இது பெரும் அதிருப்தியைத் தருவதாக இலங்கை கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பூட்டானில் நடைபெற்றுவரும் 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட் சம்பியன்ஷிப்பல் இலங்கை 2 தோல்விகளைத் தழுவியதுடன் தஜிகிஸ்தானில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றிலும் இலங்கை 2 தோல்விகளைத் தழுவியது.

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் ஈ குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் வட கொரியாவிடம் கடந்த சனிக்கிழமை 0 – 4 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்த இலங்கை, நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் வரவேற்பு நாடான தஜிகிஸ்தானிடம் 0 – 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தது.

போட்டி ஆரம்பித்து 2ஆவது நிமிடத்தில் தஜகிஸ்தான் முதலாவது கோலைப் போட்டு இலங்கையை திக்பிரமிப்பில் ஆழ்த்தியது.

அந்த சந்தர்ப்பத்தில் கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்த பந்தை அஸிஸ்பெக் தலீவ் பரிமாற பிலோல் பொபோவ் கோலாக்கினார்.

இடைவேளைக்கான உபாதை ஈடு நேரத்தில் ரஸ்டதம் கம்போலோவ் தாழ்வாக பரிமாறிய பந்தை மஸ்ருர் கஃபுரோவ் கோலாக்கி தஜிகிஸ்தானை 2  – 0 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 54ஆவது நிமிடத்தில் தஜிகிஸ்தான் விரர் கஃபுரோவை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து மொஹமத் பாதில் முரணான வகையில் வீழ்த்தியதால் பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை கஃபுரோவ் கோலாக்கி தஜிகிஸ்தானை 3 – 0 என முன்னிலையில் இட்டார்.

இலங்கை தனது 3ஆவது போட்டியில் ஓமானை நாளையும் கடைசிப் போட்டியில் மலேசியாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் எதிர்த்தாடும்.

By admin