• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை: செம்மணி – சித்துபாத்தி புதைகுழியில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்

Byadmin

Jun 20, 2026


செம்மணி - சித்துபாத்தி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் அகழ்வு பணிகள்.

பட மூலாதாரம், Parathan

படக்குறிப்பு, செம்மணி – சித்துபாத்தி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் அகழ்வு பணிகள்.

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது.

குறிப்பாக மனித புதைக்குழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து ஜூன் 17 அன்று வரை சுமார் 360க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தோண்ட தோண்ட முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மேலும் பல மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தொடர்ந்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

By admin