• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 0-1 கணக்கில் மொராக்கோ வெற்றி

Byadmin

Jun 20, 2026


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் மொராக்க அணிகள் க்ரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த இரு அணிகள் இடையிலான ஆட்டம் போஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் ஏற்படுத்தி கொடுத்த அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட இஸ்மாயில் சாய்பரி கோலாக மாற்றினார். இதனால், ஆட்டத்தின் 2-ஆவது நமிடத்திலேயே மொராக்கோ அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகள் மேற்கொண்ட கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. முதல் பாதி வரை 0-1 கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்றிருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மற்றொரு கோல் அடிக்கும் முயற்சியை ஸ்காட்லாந்து தீவிரப்படுத்தியது.

எனினும், அந்த அணியால் ஆட்டத்தின் இறுதிவரை கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மொராக்கோ அணி 0-1 கணக்கில் வெற்றி பெற்றது.

By admin