• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு என்ன காரணம்? அவரது பின்னணி என்ன?

Byadmin

Sep 22, 2024


சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சஜித் பிரேமதாஸவின் அரசியல் பயணம்

தந்தையின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் நுழைந்த சஜித் பிரேமதாஸ, இலங்கை அரசியலின் ஏற்ற இறக்கங்களில் 30 ஆண்டுகளாகப் பயணம் செய்தவர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்தவர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த சஜித், இந்த முறை கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கி இருந்தாலும், அவரால் வெற்றிபெற முடியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு என்ன காரணம்?

“திஸாநாயக்க ஜேவிபிக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கக்கூடாது. இலங்கையின் பாரம்பரிய, பழைய அரசியல் கட்சிகள் மீது, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களிடையே ஒரு வெறுப்பு இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில், அநுர குமார ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது. ஆகையால் அவருக்கு வாக்களிக்கிறார்கள்.

By admin