• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்கள், இஸ்லாமியர்கள் யாருக்கு வாக்களித்தனர்?

Byadmin

Sep 24, 2024


இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களித்தனர்?
படக்குறிப்பு, இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்திருக்கும் நிலையில், அந்நாட்டில் சிறுபான்மையினரான தமிழர்களும் இஸ்லாமியர்களும் யாருக்கு வாக்களித்தார்கள்? அதற்கான காரணம் என்ன?

இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தையும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

சில தமிழ் அமைப்புகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர், ஒட்டுமொத்தமாக, சுமார் 2.3 லட்சம் (2,26,343) வாக்குகளையே பெற்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ் வேட்பாளர்களின் நிலை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரேலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, மொனராகல, கோகாலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பொது வேட்பாளரால் முதல் ஐந்து இடங்களில் கூட வர இயலவில்லை. இந்த இடங்களில் அநுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜெயவீர ஆகியோரே இருந்தனர். சில இடங்களில் ஐந்தாவது இடத்தை கே.கே.பியதஸி என்பவர் பிடித்தார்.

By admin