• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை வந்தடைந்தார் இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே!

Byadmin

Nov 11, 2026


இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கொழும்பில் நடைபெறவுள்ள கடை திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவும் அவர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியத் திரைப்படத்துறையில் மட்டுமன்றி, இசைத்துறையிலும் பிரபலமானவராக விளங்கும் பூஜா ஹெக்டே, இன்று பிற்பகல் 2.02 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான 6E-1181 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில், அவரைச் சந்திப்பதற்காக முன்பதிவு செய்துள்ள ரசிகர்களுக்கு நாளை (11) அவரை நேரில் சந்திப்பதற்கும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கும் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாட்டாளர்கள் மற்றும் முகாமைத்துவக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

By admin