0
இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் ஒரு சிறிய விமானம், ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், நேரில் பார்த்தவர்கள் தம்மை நடுங்க வைத்த பயங்கரமான சம்பவம் என விவரித்தனர்.
“எனது ஜன்னலிலிருந்து பெரிய தீப்பந்தத்தைக் கண்டேன்” என்று, உள்ளூர்வாசியான டான் ஹில் கூறியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
“நான் இன்னும் பைத்தியம் போல் நடுங்குகிறேன். நான் அப்படி எதையும் பார்த்ததில்லை” என்று, அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்தி : எரிபொருள் துண்டிக்கப்பட்டதே ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம்!
சவுத்எண்ட் விமான நிலையம், மத்திய இலண்டனுக்கு கிழக்கே 35 மைல் தொலைவில் சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள ஒரு சர்வதேச பயண மையமாகும் என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.