• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

இளையராஜா:”சாதிய படிநிலைகளை இசையால் மீறியவர்” – 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் இசை பயணம்

Byadmin

Jun 8, 2026



இளையராஜா ஒன்பது மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பட மூலாதாரம், ILAYARAJA/X

படக்குறிப்பு, இளையராஜா ஒன்பது மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தீவிர ரசிகர்கள் அவரை “மேஸ்ட்ரோ” என அழைக்கின்றனர். அறிமுகமாகி ஐந்து தசாப்தங்களான பிறகும் இந்தியா முழுவதும் வீடுகள், கச்சேரி அரங்குகள் மற்றும் சினிமா திரைகளில் அவருடைய இசை எதிரொலிக்கிறது.

83 வயதான இளையராஜா, 9 மொழிகளில் 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார், இது இந்திய சினிமாவில் எவரோடும் ஒப்பிட முடியாத சாதனையாகும்.

1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் இசையை மாற்றியமைத்த அவர், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க இசையமைப்பாளர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.

“இளையராஜாவின் வருகை ஒரு முக்கிய திருப்புமுனை தருணம். தனித்துவமான செவிவழி ஒலிச்சூழலை உள்வாங்கிய, முற்றிலும் வேறுபட்ட சமூக மற்றும் அழகியல் பின்னணி கொண்ட ஒருவரால் ஏற்பட்ட குறுக்கீடு அது,” என பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கூறுகிறார்.

இந்தியாவில் ஜனரஞ்சக சினிமாவின் மையமாக பாடல்கள் திகழ்கின்றன. பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்களுக்கு திரையில் நடிகர்கள் உதட்டசைக்கின்றனர். அதே சமயம் அதே இசையமைப்பாளர்களே பெரும்பாலும் படத்தின் பின்னணி இசையையும் அமைக்கின்றனர்.

By admin