இந்நிலையில், அஜித்குமார் சமீபத்திய பேட்டியில் தனது கார் பந்தயத் திட்டம் குறித்து பேசியுள்ளார்.
அதில் ” எனது ‘ரெடான்ட்’ அணி மிகச்சிறந்த குழுவாகச் செயல்பட்டு வருகிறோம். இவர்களுடன் இருப்பது எனது இரண்டாவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர்.
கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய கடமைகள் இருப்பதால், தற்போதைய பந்தயக் காலங்களில் ஐரோப்பாவில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறேன்.
அடுத்த ஆண்டு ‘ஏசியன் லெ மான்ஸ்’ மற்றும் ‘இ.எல்.எம்.எஸ்’ ஆகிய தொடர்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளோம்.
என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டு கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.