• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா | PM Modi was mesmerized by Ilayaraja musical performance

Byadmin

Jul 27, 2025


அரியலூர்: கங்​கை​கொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி ரசித்துப் பார்த்தார்.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் கட்​டத் தொடங்கிய ஆயிர​மாவது ஆண்டு விழா, தென்​கிழக்கு ஆசிய நாடு​களின் மீது படையெடுத்​துச் சென்ற ஆயிர​மாவது ஆண்டு நிறைவு விழா என முப்​பெரும் விழா நடை​பெற்று வரு​கிறது. இன்று நடை​பெறும் நிறைவு விழா​வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்​தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் ‘நான் கடவுள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓம் சிவோஹம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கைகளால் தாளமிட்டப்படி ரசித்து பார்த்தார். பின்னர் தான் இசையமைத்த திருவாசகம் ஆல்பத்தில் இடம்பெற்ற மாசற்ற ஜோதி பாடலை இளையராஜா பாடினார்.



By admin