• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

இஸ்ரேல்: நெதன்யாகுவை போலவே கடுமையான கொள்கைகள் கொண்ட ஐசென்கோட்டை அரபு கட்சிகள் ஆதரித்தது ஏன்?

Byadmin

Nov 9, 2026


காடி ஐசன்கோட் மற்றும் பின்யமின் நெதன்யாகு

படக்குறிப்பு, காடி ஐசென்கோட்டுக்கு ஆறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கோ பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட மிகவும் குறைவான ஆதரவே உள்ளது (கோப்புப் படம்)

    • எழுதியவர், ரௌனக் பைடா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட்டுக்கு அரபு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய கூட்டணி அரசை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட ஐசென்கோட்டுக்கு இப்போது 28 நாள்கள் அவகாசம் உள்ளது. இதில் கூடுதலாக 14 நாள்கள் நீட்டிப்பு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

“தேசிய அவசரகாலக் கூட்டணி அரசை அமைப்பதற்கான நேரம் இது. அதற்குத் தகுதியானவர்களாக நாங்கள் இருக்க, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று ஐசென்கோட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.



By admin