• Fri. Apr 17th, 2026

24×7 Live News

Apdin News

இஸ்ரேல்–லெபனான் பதற்றம் குறையுமா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை

Byadmin

Apr 17, 2026


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கிடையிலான முக்கியமான பேச்சுவார்த்தை இன்று (ஏப்ரல் 16) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 34 ஆண்டுகளாக நேரடி தொடர்பு இல்லாத சூழலில், இந்த பேச்சுவார்த்தை ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லெபனானில் நிலவும் மோதலை கட்டுப்படுத்தும் வகையில் யுத்த நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலிய அமைச்சரவை ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விரைவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக லெபனானிய தரப்பும் சுட்டிக்காட்டியுள்ளதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அமைதி முயற்சிகளில், லெபனானில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களை கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய பிரச்சினைகள் விவாதத்தின் மையமாக உள்ளன.

By admin