• Wed. Sep 25th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – ஹெஸ்பொலா: மொசாட் தலைமையகத்தை நோக்கி ராக்கெட் வீச்சு – என்ன நடந்தது?

Byadmin

Sep 25, 2024


இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி முதன் முறையாக ஹெஸ்பொலா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை, ஹெஸ்பொலா அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரை நோக்கி காலை வேளையில் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஹெஸ்பொலா அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை குறிவைத்ததாக ஹெஸ்பொலா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார். லெபனானில் அண்மையில் நடந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி தொடர் வெடிப்புகளின் பின்னணியில் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டாலும், இஸ்ரேல் அதற்கு பொறுப்பேற்கவில்லை.

டெல்அவிவ் மெட்ரோபாலிட்டன் பகுதியை ஹெஸ்பொலா குறிவைத்தது இதுவே முதன் முறை என்று இஸ்ரேலிய ஊடகமான ஹாரெட்ஸ் ஒய்நெட் கூறியுள்ளது.

By admin