• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

இ20 பெட்ரோலால் பிரச்னையா? வாடிக்கையாளருக்கு புதிய கார் வழங்க ஆணையம் உத்தரவு

Byadmin

Jul 17, 2026


ராய்ப்பூரில் உள்ள சத்தீஸ்கர் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அலுவலகம்

பட மூலாதாரம், CG KHABAR

படக்குறிப்பு, ராய்ப்பூரில் உள்ள சத்தீஸ்கர் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அலுவலகம்

நாடு முழுவதும் எத்தனால் கலந்த இ20 (E20) பெட்ரோல் குறித்த விவாதங்கள் நடந்து வரும் வேளையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனம் அவ்வாறு செய்யத் தவறினால், வாகனத்தின் முழு விலை உட்பட மொத்தம் 20 லட்சத்து 50 ஆயிரத்து 494 ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. அத்துடன், மன உளைச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாயும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாருதி சுசூகி, சம்பந்தப்பட்ட வாகனம் இ20 எரிபொருளால் இயங்கக்கூடியது என்றும், ஆணையத்தின் உத்தரவில் பல முக்கிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் மன்றத்தில் சட்டப்படி போராடப் போவதாக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த கார் வாங்கப்பட்ட மாருதி சுசூகி டீலர்ஷிப் நிறுவனம் ஆணையத்தின் முன்னிலையில் வாதிடுகையில், புகார்தாரரின் வாகனத்தில் ஏற்பட்ட பழுது வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டது என்றும், இது எந்த சூழ்நிலையிலும் வாரண்டியின் கீழ் வராது என்றும் கூறியது.

By admin