தாக்குதல் நிறுத்தம்:
“தூதரக ரீதியிலான தீர்வையே விரும்புவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்; அதே சமயம், ஹார்முஸ் நீரிணையிலோ அல்லது நட்பு நாடுகளுக்கு எதிராகவோ ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தால், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பையும் அவர் கைவிடவில்லை,” என்று வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் கூறினார்.
மேலும், “பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் முயற்சிப்பதே புத்திசாலித்தனமானது. இல்லையெனில், என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு இரவுகளாக அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தியுள்ளதால், ஈரானும் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஈரானின் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். சமீபத்திய நாட்களில், இப்பகுதியில் அமெரிக்க படைகளை அனுமதித்துள்ள நாடுகளுக்கு எதிராக ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஜோர்டானில் உள்ள ஒரு தளத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.