• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

நீதிபதி உஜ்ஜல் புயான் போராடும் மாணவர்களுக்கு ஜாமீன்கூட மறுக்கப்படுகிறது என கூறியது ஏன்?

Byadmin

Jul 26, 2026


நீதிபதி உஜ்ஜல்

பட மூலாதாரம், NLIU Bhopal

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், இந்தியாவில் மாறுபட்ட கருத்துகளுக்கான இடம் தொடர்ந்து சுருங்கி வருவதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

“தங்களது உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டால்கூட, அவர்களின் சுதந்திரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) முன்னெடுத்த நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த நிலையில் நீதிபதி புயானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. அமைச்சரின் விலகலைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தின் போது, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் பல போராட்டக்காரர்களும் சில காவல்துறையினரும் காயமடைந்தனர்.

நீதிபதி புயானின் கருத்து சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரது கருத்து மேலும் வலுச்சேர்ப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By admin