• Thu. Jul 24th, 2025

24×7 Live News

Apdin News

ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவர்; சக மாணவர்கள் கைது – வன்முறைக்கு என்ன காரணம்?

Byadmin

Jul 23, 2025


தற்கொலைகள், கொலைகள், தமிழ்நாடு

பட மூலாதாரம், Ravi

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோர், உறவினர்கள்

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]

ஈரோட்டில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் சக பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சக மாணவியிடம் பேசிப்பழகுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இச்சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக, பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள மாணவர்களிடம் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களும், வன்முறையைக் கையாள்வதில் தவறான வழிகாட்டுதல்களுமே இதற்குக் காரணம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இத்தகைய இளம்பருவத்திலுள்ள மாணவர்களை சரியான முறையில் வழிநடத்துவதில் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் பெரும் பங்கிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்தவர் சிவா (வயது 45). துணி நிறுவனத் தொழிலாளி. இவருடைய மகன் ஆதித்யா (வயது 17). குமலன்குட்டையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூலை 2 ஆம் தேதியன்று மாலையில், பள்ளிக்கு அருகில் ஆதித்யா மயங்கிக் கிடந்ததாகவும், பல்ஸ் மிகவும் குறைவாக இருப்பதால் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் சிவாவுக்கு போன் வந்துள்ளது. அங்கு அவர் சென்றபோது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளார் ஆதித்யா. மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே ஆதித்யா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

By admin