ஐ.நா. பொது சபையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
நாங்கள் ரஷியா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அதை (போர் நிறுத்தம்) நாங்கள் செய்து முடிப்போம். மக்கள் நினைப்பதை விட இது மிக விரைவாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.
வணிக கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்தி, தங்கள் அணுசக்தி லட்சியங்களை கைவிட்டு, பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்திக்கொள்ளும் வரை, ஈரானை முழுமையான பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதை அமல்படுத்துவதில் எங்களுடன் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் நான் அழைப்பு விடுத்தேன்.
அந்த பயங்கரவாத ஆட்சி மோசமாக நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பது அல்ல. மாறாக, அவர்கள் பலவீனமாகவும் விரக்தியிலும் இருப்பதே ஆகும்.
அவர்கள் மத்திய கிழக்கின் அடாவடி சக்தியாக திகழ்ந்தனர். ஆனால், இனி அவர்கள் அந்த அடாவடி சக்தியாக இல்லை. காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றினோம்.