• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

உசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை: பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் – என்ன நடந்தது?

Byadmin

Aug 31, 2026


உசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை: பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

(எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்ற சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

மதுரை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் 16 வயது தலித் சிறுமியை அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் சம்பந்தப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் ஆகஸ்ட் 24-ம் தேதி 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக தலைமையாசிரியரை நேரில் சந்தித்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையின்படி சிறுமியின் தாயார் கைகளை கட்டிக் கொண்டு நின்ற போது, அவரது மகள் கைகளை கீழே தட்டியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த தலைமையாசிரியர் அந்த சிறுமியை திட்டி அங்கிருந்து கிளம்புமாறு சொல்லியுள்ளார்.இதனால் தனது மகள் சோகமாக இருந்ததாகவும், அன்றிரவு சாப்பிடவில்லை எனவும் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததாகவும் போலீஸிடம் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். அந்த சிறுமி மறுநாள் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் என்ன நடந்தது?

சிறுமியின் தாய் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக உள்ளார்.

By admin