• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

உடன்குடி கருப்பட்டியில் கலப்பட சர்ச்சை: அசல் – போலியை அடையாளம் காண்பது எப்படி?

Byadmin

Jul 25, 2026


உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?

சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரை கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சமர்ப்பித்த கணக்குகளின் மூலம் இது தெரிய வந்திருப்பதாக, ஜி.எஸ்.டி அதிகாரிகள் கூறுகின்றனர்.

“கருப்பட்டி ஆலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக” பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள உடன்குடி பேரூராட்சி பனங்கருப்பட்டி தயாரிப்புக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது. அங்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கருப்பட்டி வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“உடன்குடி பகுதியில் கிடைக்கும் பதநீரில் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதைப் பிற பகுதிகளில் உள்ள பனை மரங்களில் பெருமளவு பார்க்க முடியாது” என்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசீலன்.

By admin