• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

உடல்நிலை மோசம்.. ஆனாலும் சாமானியரை போல நுரையீரலுக்கு பதிவு செய்து காத்திருக்கும் நார்வே இளவரசி

Byadmin

Jun 7, 2026


நார்வே நாட்டின் அரச குடும்ப இளவரசி மெட்டே மேரிட். இவர் அந்நாட்டு அரியணையின் வாரிசான இளவரசர் ஹாகனின் மனைவி ஆவார்.

52 வயதான மேரிட்க்கு கடந்த 2018ஆம் ஆண்டு பல்மோனரி பைப்ரோஸிஸ் என்ற நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அண்மைக் காலமாக அவரின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. தலைநகர் ஓஸ்லோவில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய கடந்த டிசம்பர் மாதம் பரிந்துரைத்தது.

நோய் தீவிரமடைந்துள்ளதால் முடிந்தவரை விரைவில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு நுரையீரல் பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக நார்வே அரச குடும்பம் நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுள்ளது.

இதன் மூலம் அவருக்கு முன் நுரையீரலுக்கு காத்திருப்போருக்கு நுரையீரல் கிடைத்தபிறகே அவரது முறை வரும்போது மாற்று அறுவை சிகிச்சைக்கான நுரையீரல் வழங்கப்படும்.

நாட்டின் இளவரசியாக இருந்தபோதும், உடல்நிலை மோசமடைந்தபோதும், சாதராண குடிமக்களுக்கு உண்டான நடைமுறைப்படி பதிவு செய்து அவர் நுரையீரலுக்காக காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது வெகுவாக கவனம் பெற்று வருகிறது.

By admin