• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

உடல் எடையை குறைக்க புரத உணவு எவ்வாறு உதவுகிறது? சைவ, அசைவத்தில் சிறந்த புரத உணவுகள்

Byadmin

Jul 10, 2026


உடல் எடையைக் குறைக்க அதிக புரதம் கொண்ட உணவுகளை சாப்பிடுவது உதவுமா?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உடல் எடையைக் குறைக்க முயலும் பலருக்கும் “அதிக புரதம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்பது ஒரு பொதுவான அறிவுரையாக வழங்கப்படுகிறது.

ஆனால், புரதச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உண்மையாகவே உதவுகிறதா?

ஒருவரின் மொத்த கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக “அதிக புரத உட்கொள்ளல்” இருந்தால் மட்டுமே அதன் பயன்களை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“ஆரோக்கியமான உணவுமுறை என்பது ஆற்றல் உட்கொள்ளல், ஆற்றல் செலவு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதுடன், உணவுமுறையில் போதுமான அளவு, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அந்தச் சமநிலையில் புரதம் முக்கியமாக அங்கம் வகிக்கிறது,” என்று கூறுகிறார் மருத்துவ உணவியல் நிபுணர் ரேஷ்மா அலீம்.

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு புரதம் எவ்வளவு முக்கியம்? ஒருவர் எந்த அளவிலான புரதத்தை உட்கொள்வது சரியானது?

By admin