• Tue. Jul 22nd, 2025

24×7 Live News

Apdin News

உடல் எடை குறைப்பு: தசை இழப்பை சந்திக்காமல் கொழுப்பைக் குறைப்பது எப்படி? அறிவியல் உண்மைகள்

Byadmin

Jul 21, 2025


உடல் எடை குறைப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, முக்கிய செய்திகள், உடல் ஆரோக்கியம், உணவுக் கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

உடல் எடையைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்முறையை பின்பற்றுகின்றன. இருப்பினும் அவை அனைத்தும் ஒரே விஷயத்தை அடிப்படையாகக் கொண்டவை. அது தான் கலோரி டெஃபிசிட் எனப்படும் கலோரி பற்றாக்குறை. அதாவது நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவைக் காட்டிலும் கூடுதல் கலோரிகளை செலவிடுவது.

உடல் சேகரித்து வைத்திருக்கும் கொழுப்பை உடலுக்கு தேவையான ஆற்றலாக பயன்படுத்துவது தான் இதன் பின்னால் இருக்கும் அம்சம் என்று கூறுகிறார் பாப்லியஸ் ப்ராகா. பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள நூவே டி ஜூலியோ என்ற மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவராக அவர் பணியாற்றி வருகிறார்.

இந்த கலோரிகள் பற்றாக்குறையை ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் மூலம் எட்ட முடியும். இருப்பினும் எவ்வளவு கலோரிகளை செலவிடுகிறோம், உணவின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் போது எடை இழப்பானது உடலின் கொழுப்பை குறைப்பதால் மட்டும் ஏற்படாது. தசைகளின் நிறையையும் குறைத்து உடல் எடை குறையும்.

கூடுதலான கொழுப்பை போன்றே குறைவான தசை நிறையை கொண்டிருப்பதும் ஆபத்தானது தான். உங்களின் வளர்சிதை மாற்றம் மெதுவாகும், கொழுப்பைக் குறைக்க தேவையான உடலின் செயல்திறன் குறையும், சருமம் தொய்வுற ஆரம்பிக்கும்.

By admin