• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

உணவுக் கழிவுகளை என்ன செய்வது? உலகுக்கே தென் கொரியா காட்டிய நூதன உதாரணம்

Byadmin

Nov 10, 2026


உணவுக் கழிவு, புவி வெப்பமயமாதல், தென் கொரியா, நியூயார்க், மக்கும் கழிவு, மக்காத கழிவு, கழிவு மேலாண்மை

தென் கொரியா, குப்பை மேடுகளுக்குச் செல்லும் வீட்டு உணவு வீணடிப்பை 97%இல் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. நியூயார்க் நகரமும் தற்போது எஞ்சிய உணவுகளை அதே வழியில் அனுப்பத் தொடங்கியுள்ளது.

தென் கொரியாவின் சியோலில் உள்ள யோயிடோவில் ஒரு சனிக்கிழமை பிற்பகலில், சுங்ஹவான் ஹாங் தனது வாராந்திர காய்கறி குப்பை, பழத்தோல்கள், மீதமான சாதம் ஆகியவற்றைச் சேகரித்துத் தனது குடியிருப்பு வளாகத்தில் உள்ள உணவு வீணடிப்பு அகற்றும் பிரிவை நோக்கிக் கீழே செல்கிறார். அவர் தனது கார்டை ஸ்கேனரில் தட்டுகிறார், மூடி திறக்கிறது, எஞ்சிய உணவுகளின் எடை திரையில் காட்டப்படுகிறது, மேலும் அதற்கான கட்டணம் அவரது வீட்டுப் பராமரிப்புக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை முடிவடைய ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகிறது. ஆனால் இதன் பின்னணியில் உலகின் மிகவும் லட்சியமிக்க கழிவு மேலாண்மை பரிசோதனைகளில் ஒன்று உள்ளது. வீடுகளில் உணவு வீணாவதைத் தடுக்கும் முயற்சியில் தென் கொரியா உலகின் பிற நாடுகளைவிட வெகுதூரம் முன்னேறி வெற்றி பெற்றுள்ளது. இன்று, அமெரிக்கா, தென் கொரியாவின் வெற்றியைப் பின்பற்றுவதற்கான முதல் அடியை எடுத்து வருகிறது.

உணவு வீணாவது என்பது உலகளாவிய பிரச்னை. அமெரிக்காவில், நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் வாரத்திற்கு சுமார் 56 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உணவை வீணடிக்கிறது. உலகளவில், ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டன்னுக்கும் அதிகமான உணவு வீணாகிறது, இது புவி வெப்பமயமாதலை உண்டாக்கும் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 10% பங்களிக்கிறது.

உணவுக் கழிவை குறைத்த தென் கொரியா: நியூயார்க் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

தென் கொரியாவின் 30 ஆண்டுக்கால கழிவு மேலாண்மை முயற்சிகள்

இருபதாம் நூற்றாண்டில் அதிவேக நகரமயமாக்கலால் ஏற்பட்ட கழிவு நெருக்கடியே தென் கொரியாவின் இந்தத் தீர்வுக்குக் காரணமானது. உணவுப் பொருட்கள் பொதுவான கழிவுகளுடன் தூக்கி எறியப்பட்ட இடங்களில், குப்பை மேடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் அதிகளவில் இருந்தன.



By admin