• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில் சுஜானின் தவறால் வெற்றியை நழுவவிட்டது இலங்கை

Byadmin

Nov 10, 2026


டாக்கா தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற பூட்டானுக்கு எதிராக நடைபெற்ற ஏ குழு சாவ் சம்பயின்ஷிப் போட்டியில் கோல்காப்பாளர் சுஜான் பெரேரா இழைத்த தவறுகளால் இலங்கையின் வெற்றி நழுவிப் போனது.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் பெனல்டி ஒன்றை சுஜான் பெரேரா தடுத்து நிறுத்திய போதிலும் அதற்கு முன்னர் 35ஆவது நிமிடத்திலும்  பின்னர்76ஆவது நிமிடத்திலும் இழைத்த தவறுகளால் பூட்டான் 2 கோல்களைப் போட்டு ஆட்டத்தை 2  – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இதன் காரணமாக இலங்கை அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் அற்புதமாக விளையாடிய இலங்கை குறைந்தது 3 கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டது.

இதனை சாதகமாக்கிக்கொண்ட பூட்டான் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் கோல்போட்டு முன்னிலை அடைந்தது.

எனிலும்  அடுத்த நிமிடமே ஒலிவர் கெலார்ட் தனி ஒருவராக பந்தை நகர்த்தி அலாதியான கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

போட்டியின் 44ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒலிவர் கெலார்ட் இடது புறத்திலிருந்து பரிமாறிய பந்தை வசீம் ராஸீக் தலையால் முட்டி  கோல் போட்டு இடைவேளையின்போது இலங்கையை 2 – 1 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியினரின் விளையாட்டு அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் பூட்டானுக்கு வழங்கப்பட்ட பெனல்டியை சுஜா ன்  பெரேரா தடுத்து நிறுதித்தினார்.

தொடர்ந்து இலங்கையின் கோல் எல்லையை ஆக்கிரமித்த பூட்டான் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது.

இதனிடையே டிலொன் பெரேரா, ஆதவன் ராஜமோகன்,  ராகுல் சுரேஷ் ஆகியோர் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால், போட்டியின் 76ஆவது நிமிடத்தில் கோல் காப்பாளர் சுஜான் பேரேரா பந்தைப் பிடிப்பதற்கு பதிலாக ஷ்டியாமல் தடுத்ததால் பூட்டான் கோல் நிலையை சமப்படுத்தியது.

தொடர்ந்து கடைசிக் கட்டத்தில் இலங்கைக்கு கிடைத்த கோல் போடும் இரண்டு வாய்ப்புகள் தவறவிடப்பட்டது. இது இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

By admin