• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

உணவுப் போட்டி உயிரைப் பறிப்பது எப்படி? அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது?

Byadmin

Sep 16, 2024


உணவு உண்ணும் போட்டி

பட மூலாதாரம், YouTube/Wake and Bite

படக்குறிப்பு, உணவுப் போட்டிகளுக்கு அறிவிக்கப்படும் பரிசுத் தொகை பலரை ஈர்க்கின்றது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். 50 வயதான அந்த நபர் தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஒரே நேரத்தில் மூன்று இட்லிகளை வாய்க்குள் திணித்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக ஏ.என்ஐ. செய்தி முகமை கூறுகிறது.

இந்தியாவில் உணவு விடுதிகளும் உணவு உற்பத்தி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இதுபோன்ற உணவுப் போட்டியை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது. அத்தகைய உணவுப் போட்டிகளில் யார் பங்கேற்கிறார்கள்? அவர்களை போட்டியில் பங்கேற்க தூண்டுவது எது? இந்தப் போட்டி எப்போது உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது?

உணவு உண்ணும் போட்டி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உணவுப் போட்டி உயிரைப் பறிப்பது எப்படி?

எந்த வகையான உணவாக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தானது என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொது மருத்துவத்துறை தலைவராக இருக்கும் அவர், உணவுப் போட்டிகளில் பங்கேற்கும் போது, அது யாருடைய உயிருக்கு ஆபத்தாக இருக்கும், யாருக்கு இருக்காது என்பதை கணிக்க முடியாது என்கிறார்.

“உணவுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். எனவே அவர்களது இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்ளும் போது, உணவு குழாய் மற்றும் வயிற்றுப்பகுதி தொந்தரவுக்கு உள்ளாகும். வேகஸ் எனும் நரம்பு உணவுக் குழாய்க்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கக் கூடிய நரம்பாகும். அதிக அளவு உணவு உள்ளே செல்லும் போது, இதய செயல்பாட்டை குறைக்குமாறு வேகஸ் நரம்புக்கு சமிக்ஞை கிடைக்கும். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு பல நேரங்களில் இதுவே காரணமாகும். சாப்பிடுபவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்தால் அவர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கும்” என்கிறார்.

By admin