• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

உத்தரபிரதேசம்: இந்துக்களின் கன்வார் யாத்திரையால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு? பிபிசி கள ஆய்வு

Byadmin

Jul 21, 2025


கன்வர் யாத்திரை
படக்குறிப்பு, வட இந்திய மாநிலங்களில் கன்வார் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது

    • எழுதியவர், பிரேர்னா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்து மத நாட்காட்டியின்படி, ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இந்த பன்னிரண்டு மாதங்களில் ஒன்றாக சாவன் எனும் மாதம் உள்ளது.

இந்துக்களுக்கு, இது சிவபெருமானை பக்தியோடும் நம்பிகையோடும் வழிபடுவதற்கு உகந்த மாதம். ஆனால் சிலருக்கு, இது உதவியற்ற நிலை, வாழ்வாதாரம் குறித்த கவலைகள் மற்றும் அடையாளம் குறித்த கேள்விகள் எழும் மாதமாக உள்ளது.

குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் கன்வார் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பெயர் மற்றும் அடையாளம் குறித்த சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டு, கன்வார் யாத்திரைக்குச் செல்லும் வழியில் அனைத்து தாபாக்கள் , ஹோட்டல்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களும் கியூஆர் (QR) குறியீடு ஸ்டிக்கர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை உரிமங்களை ஒட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

By admin