• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

உத்தராகண்ட் நிலச்சரிவு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேரும் மீட்கப்பட்டது எப்படி?

Byadmin

Sep 15, 2024


உத்தராகண்ட் நிலச்சரிவு, 30 தமிழர்கள் மீட்பு

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, உத்தராகண்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. புனித தலங்களுக்கு சென்ற பக்தர்கள் பலரும் அருகே இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தவாகாட் – தானக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் மேற்கொண்டு பயணிக்க இயலாமல் சிக்கித் தவித்து வந்தனர். அவர்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து ஆதி கைலாஷ் பகுதிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் ஆவர்.

தற்போது ஹெலிகாப்டர் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள் என்ன கூறினர்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழர்கள் கூறியது என்ன?

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 30 நபர்கள் உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷ் பகுதிக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 28 பேர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள். இருவர் சீர்காழியை சேர்ந்தவர்கள்.

By admin