• Sat. Jul 19th, 2025

24×7 Live News

Apdin News

உயரும் வெள்ளி விலை – தங்கத்தைவிட முதலீடு செய்ய சிறந்த தேர்வா?

Byadmin

Jul 18, 2025


 வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா தனது வர்த்தகப் பங்காளிகள் மீது கடுமையான வரிகளை அறிவித்ததில் இருந்து வெள்ளி விலை உயர்ந்து வருகிறது

    • எழுதியவர், அஜித் காத்வி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியர்களுக்கு தங்கம் மீதுதான் மிகுந்த விருப்பம் என கருதப்படுகிறது. ஆனால், இப்போது தங்கத்தைவிட வெள்ளி பற்றிய செய்திகள்தான் அதிகமாக வருகின்றன.

ஜூலை 10 முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்குக் கடுமையான வரிகளை அறிவித்ததால், வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள வெள்ளி விலை, ஒரு கிலோவுக்கு ரூ.1.13 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் வெள்ளி விலை ஏழு சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் ஒரு சதவிகிதம்தான் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போது ஒரு அவுன்ஸுக்கு (28.35 கிராம்) 39 டாலர்களை தாண்டியுள்ளது.

ராய்ட்டர்ஸ் அளித்துள்ள தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் வெள்ளி விலை 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஐந்து சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

By admin