• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

உலக எமோஜி தினம்: நீங்களும் புதிய எமோஜிக்களை உருவாக்கலாம் – அங்கீகரிப்பது யார் தெரியுமா?

Byadmin

Jul 18, 2025


உலக எமோஜிக்கள் தினம், எமோஜிக்கள்,

பட மூலாதாரம், Getty Images

மகிழ்ச்சி, துக்கம், நையாண்டி என அனைத்து வகை உணர்வுகளையும், ‘சாட்டில்’ வெளிப்படுத்த நீங்கள் தினமும் எமோஜிக்களை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் எமோஜிக்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஜூலை 17, அதாவது இன்றுதான், உலக எமோஜி தினம். இந்த தினம் ஏன் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது என்று தெரியுமா? நீங்கள் உங்கள் ஃபோன்களில் பார்க்கும் நாட்காட்டியை குறிக்கும் எமோஜியில் காட்டப்படும் தேதி ஜூலை 17. அதனால்தான் இந்த நாள் எமோஜி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு ஜப்பானிய வடிவமைப்பாளர் ஷிகேதாகா குரிதா என்பவரால் முதல் எமோஜி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பிரபலமான எமொஜிக்கள், இன்று நாள்தோறும் 10 பில்லியன் முறை மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று 12வது உலக எமோஜிக்கள் தினம். பிரபலமான எமோஜிக்கள் உள்படப் பல எமோஜிக்களின் பின்னால் உள்ள சுவாரசியமான தகவல்களை இங்கே பார்ப்போம்.

By admin