• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

உலக கருவுறுதல் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைந்து வருகிறது – காரணம் என்ன?

Byadmin

Jul 14, 2025


கருவுறுதல் விகிதம், இந்தியா, உலகம், ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஸ்டெபனி ஹெகார்டி
    • பதவி,

நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர்.

ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: ‘அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?’

மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான்.

ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,”நாங்கள் வெறுமனே பள்ளிக்கு செல்வோம். பாடத்திட்டத்திற்கு வெளியே எதுவும் இல்லை, ஆனால் இன்று நீங்கள் உங்கள் குழந்தையை நீச்சல் வகுப்புகளுக்கும், ஓவிய வகுப்புகளுக்கு அனுப்பவேண்டியுள்ளது. அவர்கள் வேறு எதையெல்லாம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்,” என்றார் நம்ரதா.

By admin